I am a free bird

சன்னா மசாலா

April 30, 2009

சன்னா மசாலா

வெள்ளைக்கொண்டைகடலை கால் கிலோ

வெங்காயம் 3

தக்காளி 6

இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்

பச்சைமிளகாய் 6

சீரகம் 1/2ஸ்பூன்

மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை

சன்னாமசாலா பவுடர் 1 ஸ்பூன்

தனியா தூள் 2 ஸ்பூன் மிளகாய்தூள் 4 ஸ்பூன்

எண்ணெய் உப்பு தேவையான அளவு,

வெள்ளைக்கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும் காலையில் குக்கரில் வேக வைக்கவேண்டும்.

வெந்த கொண்டைக்கடலையை ஒருகைஅளவு எடுத்து மிக்ஸியில் நன்றாக மசிக்கவேண்டும்

தக்காளி, பச்சைமிளகாயை தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் போட்டு பொரிந்ததும், இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம்போட்டு வதக்கி, சன்னா மசாலா தூள் போட்டு, அரைத்த தக்காளி, பச்சைமிளகாய் விழுது மசித்த கொண்டைக்கடலை விழுது தேவையான் உப்பு, மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, தனியாத்தூள், மிளகாய்தூள்,அரைகப் நீர் சேர்த்து கொதிக்க வைத்து கிரேவி பதத்திற்கு வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி சப்பாத்தி, தோசை, இட்லி ஆகிய வற்றிற்கு தொட்டு சாப்பிடவேண்டியதுதான்.

0 கருத்துரைகள்:

Post a Comment