I am a free bird

வெஜிடபிள் ஸாக்

April 30, 2009

வெஜிடபிள் ஸாக்

கேரட் 2, பீன்ஸ் 100, தட்டைப்பயிறு 25கிராம், உருளைக்கிழங்கு 2, தக்காளி 2, இஞ்சி 1 துண்டு,பச்சைமிளகாய் 3, முந்திரிப் பருப்பு 10, பால் பவுடர் 1 ஸ்பூன், உப்பு

கேரட், பீன்ஸ், உருளை ஆகியவற்றை நறுக்கி வேக வைக்கவும்.

தக்காளி பச்சைமிளகாய், இஞ்சி, முந்திரிப்பருப்பை நைசாக அரைத்துக்கொள்ளவும்.

ஊறவைத்த தட்டைப் பயிறை தனியே வேக வைத்து எடுத்து வேக வைத்த காய்கறிகளுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

அரைத்த தக்காளி கலவையை பால் பவுடரில் கல்ந்து காய்களுடன் சேர்த்து தேவையான உப்பு தண்ணீர் சேர்த்து மூன்று நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி, கொத்த மல்லி தழை தூவி பரிமாற சுவையோ சுவைதான்

இந்த ஸாக் சப்பாத்தி, பூரி, நாண், என அனைத்திற்கும் ஏற்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment