I am a free bird

காலிப்ளவர் கிரேவி

June 26, 2009


காலிப்ளவர் கிரேவி:


காலிப்ளவர் - 1,
தக்காளி -2,
பெரிய வெங்காயம் -2,
ஏலக்காய்-3,
சீரகம்1/2 டீஸ்பூன்,
லவங்கம்-3,
கடுகு 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை 2 கொத்து,
புதினா 2 கொத்து,

துறுவிய தேங்காய் ஒரு கப்,
பச்சைமிளகாய்-4,
இஞ்சி சிறு துண்டு,
பூண்டு -4-பல்,

எண்ணை -5 டீஸ்பூன்,

மஞ்சள்தூள்,
உப்பு தேவைக்கு


இஞ்சி,பூண்டு,மிளகாய்,தேங்காய்,
இவற்றை நைசாக அரைத்து
தனியாக வைக்கவும்.

காலிப்ளவரை சிறிதுசிறிதாக நறுக்கி
வெந்நீரில் போட்டு நன்கு கழுவி,
தேவையான தண்ணீர் விட்டு வேக விடவும்.

வெங்காயம்,தக்காளியை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும் கடுகு,
ஏலக்காய், லவங்கம், சீரகம், கருவேப்பிலை,
புதினா சேர்த்து தாளிக்கவும்.
பிறகு வெங்காயம் தக்காளி சேர்க்கவும்.

இவை நன்கு வதங்கியதும்
வேகவைத்துள்ள காலிப்ளவர் சேர்க்கவும்.

இப்போது அரைத்து வைத்துள்ள மசாலா,
மஞ்சள்தூள், உப்பு இவற்றைச் சேர்த்து
பச்சை வாசானை போகும்வரையில் வதக்கவும்.
கிரேவி கெட்டியானதும் இறக்கவும்.

தேவைப்பட்டால் சிறிது தண்ணிர் சேர்க்கலாம்.
காலிப்ளவர் கிரேவி தயார்.





பாகற்காய் ப்ரை



பாகற்காய் ப்ரை.

பாகற்காய்-200கி
வெங்காயம் 150கி
மிளகாய்தூள் 2 டீஸ்பூன்,
உப்பு தேவைக்கு,
தயிர் 50மிலி.

பாகற்கயை சிறிது சிறிதாக நறுக்கிக் கொண்டு
அதில் இருக்கும் விதைகளை நீக்கவும்.
நறுக்கின பாகற்காயோடு, தயிர், உப்பு சேர்த்து பிசறி
ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
(தயிரில் பாகற்காயை பிசறி வைப்பதால்
கசப்புச் சுவை தெரியாது.)

வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து,
பிசறி வைத்துள்ள பாகற்காயையும் போட்டு
அடுப்பை சிம்மில் வைத்து வதக்கவும்.

பாகற்காய் பாதி வெந்ததும் வெங்காயம், மிளகாய்தூள்,
சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
பாகற்காய் நன்கு வேகும் வரை வதக்கி இறக்கவும்.
பாகற்காய் ப்ரை தயார்.











காய்கறிக்குருமா



காய்கறிக்குருமா.

பலவிதமான காய்கறிகள் - 2 கப்,
(கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு,)
சின்னவெங்காயம் ஒரு கப்,
சிவப்பு மிளகாய் 8,
பூண்டு- 6 பல்,
மிளகுத்தூள்- 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் சிறிது,
தேங்காய், 4 டீஸ்புன்,
நெய் வதக்க தேவையான அளவு,
உப்பு தேவைக்கு.

காய்கற்களை ஒரே விதமாக நறுக்கி,
தேவையான அளவு வெந்நீர் ஊற்றி
சிறிது உப்பு போட்டு மூடி வைக்கவும்.

மிளகாய் பூண்டு, மிளகுத்தூள், சீரகம், மஞ்சள்தூள்,
தேங்காய் சேர்த்து
மிக்சியில் மைய அரைக்கவும்.

வாணலியில் நெய் விட்டு,
வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும்,
அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும்.

பிறகு மூடி வைத்துள்ள காய்கறிகளை தண்ணீரோடு கொட்டி
குக்கரில் வைத்து தேவையான உப்பு சேர்த்து வேக விடவும்.
ஒரு விசில் வந்ததும் இறக்கி கிளறி பரிமாறலாம்.

இது சப்பாத்தி பூரிக்கு
தொட்டுச் சாப்பிட செய்துகொடுக்கலாம்.