
தேங்காய் துவையல்
தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் ஒரு மூடி,
(முற்றிய தேங்காய் நல்ல சுவையாக இருக்கும்.)
புளி அரை நெல்லிக்காய் அளவு,
பெருங்காயம் ஒரு சிட்டிகை,
சிவப்புமிளகாய் (வற்றல்) 12,
உருட்டு உளுந்து ஒரு தேக்கரண்டி,
கடுகு ஒரு தேக்கரண்டி,
கருவேப்பிலை இரண்டு ஈர்க்கு,
உப்பு.
செய்முறை: மிளகாய்,உளுந்து, கடுகு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும். பிறகு, தேங்காய் துருவல், புளி,பெருங்காயம் கருவேப்பிலை, உப்பு இவற்றுடன் சேர்த்து மிக்ஸியில் குறைவாக தண்ணீர் சேர்த்து கெட்டியாகவும் நைஸ்ஸாகவும் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இந்த துவையல் இட்லி, தோசை, சப்பாத்தி, புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர்சாதம், தேங்காய் சாதம் ஆகியவற்றிற்கு தொட்டுச்சாப்பிட மிகவும் ருசியாகவும் இருக்கும். இடியாப்பத்திற்கும் சேர்த்து பிசைந்து சாப்பிட ஏற்றது. இரண்டு நாட்கள் வரை கெடாது. வெளியூர் செல்லும் போது மேலே குறிப்பிட்ட அனைத்து உணவிற்கும் தொட்டு சாப்பிட தனியாக பார்சல் செய்து எடுத்துச்செல்லலாம் கெட்டுப்போகமல் இருக்கும்.
தேங்காயயையும் வறுத்து சேர்த்து அரைக்கலாம். சிலர் இதை விரும்பக்கூடும்.
இதில் இனிப்பு,புளிப்பு,காரம்,உப்பு என நான்கு வகையான சுவையும் கலந்து இருப்பதால் மிக சுவையாக இருக்கும்.
4 கருத்துரைகள்:
Ithu naan saaptiruken...
My amma preparation ll be super on this thuvaiyal...
samayal concept is good
நன்றி ஸ்ரீராம். இது எனது அம்மா, அத்தை
இருவரும் செய்து தந்ததுதான்
வழிபோக்கன் அவர்களே, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Post a Comment