I am a free bird

தவலை தோசை

April 18, 2009

தவலை தோசை

அரிசி 11/2 கப்

துவரம்பருப்பு 1/2கப்

கடலைபருப்பு1/2கப்

சிவப்பு மிளகாய் 10

தயிர் 21/2 கப்

பச்சைமிளகாய் 6

எண்ணெய், கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை தாளிக்கதேவையான அளவு.

அரிசியை மிக்ஸியில் முக்கால்வாசி ரவையாக உடைத்துக்கொள்ளவும். பின்னர் பருப்பு வகைகளையும் ரவையாக உடைக்கவும்.

தயிரில் தேவைக்கு ஏற்றவாறு உப்பு போட்டு, உடைத்த அரிசி,பருப்பு வகைகளை சேர்த்து முதல்நாள் இரவே கலந்து வைத்துவிடவும்.

காலையில் வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய், கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை போட்டு தாளித்து

கரைத்து வைத்துள்ள மாவில் போடவும். மாவை தோசை மாவு பத்தத்திற்கு கரைத்துக் கொண்டு அடுப்பில் தோசைக்கல்லை போட்டு சூடு ஏறியதும் தோசையை சிறிது கனமாக கல்லில் ஊற்றி எண்ணெயை தோசையை சுற்றி ஊற்றி, வெந்ததும் மறுபுறமும் திருப்பிப் போட்டு சிவக்க வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

தவலை தோசைக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, தக்காளி சட்னி வகைகள் ஏற்றது.

வாழைப்பூ வடை

வாழைப்பூ வடை


வாழைப்பூ - 1

கடலைப்பருப்பு - 1 கப்

சிவப்புமிளகாய் - 2

பெருங்காயத்தூள் சிறிது

சோம்பு - 1 டீஸ்பூன்

இஞ்சி - ஒரு சிறு துண்டு

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிது

உப்பு

எண்ணை


கடலைப்பருப்பை, மூன்று மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாழைப்பூவை, நறுக்கித் தண்ணீரில் போட்டு வைக்கவும்.

தண்ணீரிலிருந்து பூவை எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிற்கு, வேறு சுத்தமான தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து ஒரிரு நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட்டு கீழே இறக்கி, நீரை ஒட்ட வடித்து விட்டு ஆற விடவும். சற்று ஆறியபின், கைகளால் நன்றாக பிழிந்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஊறவைத்துள்ள் பருப்பை, நன்றாக அலசி, நீரை வடித்துவிட்டு, அத்துடன் காய்ந்தமிளகாய், இஞ்சி, சோம்பு, பெருங்காயம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வழித்தெடுக்கும் முன்னர், வெந்த வாழைப்பூவைப் போட்டு ஓரிரு சுற்றுகள் சுற்றி எடுத்துக் கொள்ளவும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

எண்ணையைக் காயவைத்து, மாவை வடையாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.

சூடான வாழைப்பூ வடை சாப்பிட தயார்.