கீரை வடை
உளுந்தம் பருப்பு- 1/2 கிலோ,
அரிசிமாவு - ஒரு கப்
இஞ்சி சிறிய துண்டு,
பச்சை மிளகாய்-6
பெரிய வெங்காயம்- 5
கீரை(அரை கீரை, முருங்கைக்கீரை)
கொத்தமல்லி சிறிது,
எண்ணெய், உப்பு தேவைக்கு.
பருப்பை ஒரு மணிநேரம் வரை ஊறவைக்கவும்.
இஞ்சி, பச்சை மிளகாய்,வெங்காயத்தைபொடியாக
நறுக்கிக் கொள்ளவும்
கீரையை சுத்தப்படுத்தி ஆய்ந்து வைக்கவும்.
மிக்ஸியில் உளுந்தம்பருப்பை கரகரப்பாக அரைத்து
அதனுடன் நறுக்கிய வெங்காயம், கீரை, இஞ்சி,
பச்சைமிளகாய், மல்லித்தழை, உப்புச் சேர்த்து
நன்றாக கலந்துகொள்ளவும்.அரிசிமாவையும் சேர்த்துக்
கலந்துகொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் சூடானபின்,
வாழை இலையில் வடைகளைத் தட்டி எண்ணெயில்
போட்டு,வெந்தவுடன் சூடாக பரிமாறவும்.