
சைவக்குருமா:
தேவையான பொருள்கள்:
தேங்காய் ஒரு மூடி துறுவியது,
பொட்டுக்கடலை ஒரு கைஅளவு,
பச்சைமிளகாய் 4,
இஞ்சிபூண்டு நறுக்கியது ஒருதேக்கரண்டி
சோம்பு 1 தேக்கரண்டி
இந்த ஐந்து பொருள்களையும் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பெரியவெங்காயம் 3, தக்காளி 4 நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
கடையில் விற்கும் குருமாமசாலா பவுடர் இரண்டு தேக்கரண்டி,
மற்றும் கிராம்பு 2, பட்டை ஒரு சிறுதுண்டு, ஏலம் 2,
விருப்பம் இருந்தால் முந்திரி பருப்பு 4,
எண்ணெய் 4 தேக்கரண்டி, உப்பு.
முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு கிராம்பு, பட்டை, ஏலம், முந்திரி போட்டு வறுத்து,
வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி
அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து வதக்கி
தேவையான அளவு உப்பு போட்டு
மூன்று டம்ளர் நீர் விட்டு
இரண்டு தேக்கரண்டிமசாலாதூள் சேர்த்து
நன்கு கொதி வந்தவுடன் இறக்கவும்.
அதிக சுவை விரும்புபவர்கள் மசாலா சேர்த்து கொதிவரும்போது ஒரு டம்ளர் தேங்காய் பால் சேர்த்து இறக்கலாம்.
இதில் வேகவைத்த காலிப்ளவர் சேர்த்து கொதிக்கவைத்து இறக்கினாலும் நன்றாக இருக்கும்.
இதை சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்.
பூரிக்கு கிழங்கு தொட்டு சாப்பிடபிடிக்காதவர்கள் இந்த குருமாவை வேண்டாம் என கூறவே மாட்டார்கள்.
வயதானவர்கள் பூரியை இந்த குருமாவில் ஊறவைத்து சாப்பிடுவதை மிகவும் விரும்புவார்கள்.
பட்டை கிராம்பு இல்லாமலும் இதை தயாரிக்கலாம்.