I am a free bird

அப்பம்.

April 11, 2009

அப்பம்.

மைதா ஒரு கப், வெல்லம் 3/4 கப், பழுத்த வாழைப்பழம் 1/2துண்டு,

ஏலம் பொடிசெய்தது சிறிதளவு,

எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

வெல்லத்தோடு சிறிது தண்ணீர் சேர்த்து, வெல்லத்தை கையால் நன்கு கரைத்துக் கொள்ளவும்.

பிறகு வாழைப்பழத்துண்டையும் சேர்த்து மசித்துக் கொள்ளவும்.

இதில் மைதா ஏலம் சேர்த்து இட்லி மாவு பதத்திற்குகரைத்துக்கொள்ளவும்.


வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் ஒரு கரண்டியால் இந்த மாவை எடுத்து எண்ணெயில் இடவும்.

இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து விடவும்.

பார்த்தவுடனேயே நாக்கில் எச்சில் ஊறவைக்கும் அப்பம் நொடியில் ரெடி.

அவல் பாயசம்

அவல் பாயசம்.

பால் 7கப், அவல் 1கப், சர்க்கரை 2கப்,

முந்திரி, பாதாம் பருப்புகள் 8, ஏலப்பொடி அரை ஸ்பூன்

நெய் 6ஸ்பூன்.

பாலை நன்றாகக் காய்ச்சி, அதில், கல் நீக்கி கழுவிய அவலைச் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

பாதாம், முந்திரியை வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.

அவல் நன்றாக வெந்தவுடன், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி அதனுடன் நெய், வறுத்துப் பொடி செய்துள்ள பாதாம், முந்திரி, ஏலப்பொடி சேர்த்து கிளரவும்.

சூடான சுவையான அவல் பாயாசம் நொடியில் சுவைக்கத் தயார்.

ரவை பாயாசம்.

ரவை பாயாசம்.

ரவை 200கிராம், சர்க்கரை 400 கிராம், பால் 200மி.லி.,

முந்திரி 10, ஏலம் 4,

நெய் 5ஸ்பூன்,

ரவையில் சிறிது நெய் சேர்த்து தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு போல் செய்து கொள்ள வேண்டும்.

பிசைந்து வைத்த ரவை அரைமணி நேரம் ஊறினதும், ரவையை உருண்டைகளாக உருட்டி, கிள்ளி கிள்ளி போட்டு நிழலிலேயே காய வைக்க வேண்டும்.

வாணலி சூடான பின் சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.

பிறகு நிழலில் காயவைத்த ரவை உருண்டைகளை நெய்யில் வறுத்து எடுத்துக் கொண்டு சிறிது நேரம் ஆறவிடவும்.

பிறகு கொதி தண்ணீரில் போட்டு எடுத்து, கொதித்த பாலில் உருண்டைகளை கலந்து, ஏலகாய் பொடி போட்டு, சர்க்கரை முந்திரி திராட்சை சேர்த்து நன்கு கலக்கி அருந்த சூப்பர் சுவையாக இருக்கும்.

சோளபாயாசம்.

சோளபாயாசம்.

சோள ரவை 1 கப், பாசிப்பருப்பு கால் கப், வெல்லம் அரைகப்,

பால் அரை லிட்டர், ஏலம் 2.

சோளரவையையும், பாசிப்பருப்பையும் தனித்தனியாக லேசாக வறுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பை வேக வைக்கவும்.

பாதி வெந்த நிலையில் சோள ரவையை சேர்த்து வேகவிடவும்.

சோளரவை, பா.பருப்பு இரண்டும் வெந்தவுடன் வெல்லத்தையும், எலத்தையும் பொடிசெய்து சேர்க்கவும்

பிறகு நன்கு கிளறி சூடான பாலினைச் சேர்த்து கொதிக்க விட்டு சிறிது நேரம் கழித்து இறக்கிட,

வித்தியாசமான சுவையில் சத்தான பாயாசம் தயார்.

கோதுமை பாயாசம்

கோதுமை பாயாசம்

கோதுமை 250கிராம்(உடைந்தது)

வெல்லம் 500 கிராம்

தேங்காய் 2.

நெய் 4ஸ்பூன்

காய்ந்த திராட்சை, முந்திரி, சுக்குபொடி, சீரகப்பொடி தலா 10கிராம்

ஏலம் 5கிராம்

தேங்காயை துருவி அரைக்கப் சுடு தண்ணீர் சேர்த்து அரைக்கவும் இதை வடிகட்டி பாலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு மீண்டும் இதே போல் இரண்டுமுறை சுடுதண்ணீர் சேர்த்து பாலை எடுத்து மூன்று பாலையும் தனித் தனிப்பாத்திரங்களில் வைக்கவும்.

கோதுமையை நெய்விட்டு வறுத்து ஒன்றரைக்கப் நீர் விட்டு வேகவிடவும்.

கோதுமை வெந்ததும் அதில் இரண்டாவது மற்றும் மூன்றாவது தேங்காய்பாலை சேர்த்து கொதிக்கவிடவும்.

கோதுமை கலவை சிறிது கெட்டியாகும் போது வெல்லத்தை பொடி செய்து சேர்க்கவும்.

வெல்லம் கரைந்து கெட்டியாகும் போது முதல் பாலைசேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்கவிடவும்.

இதில் முந்திரி, திராட்சை,வறுத்து சேர்க்கவும்.

பிறகு ஏலம் பொடிசெய்தது, சுக்குபொடி, சீரகப்பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

சுவீட்டான கோதுமை பாயாசம் சுவைக்கத் தயார்.

பயத்தம் பருப்பு பாயாசம்.

பயத்தம் பருப்பு பாயாசம்.

பயத்தம் பருப்பு 1 கப், பால் 1/2 லிட்டர், ஜவ்வரிசி 1 கப், சர்க்கரை 2 கப் ,

முந்திரி, திராட்சை 10கிராம், ஏலக்காய் 3,

நெய் 2 ஸ்பூன்,

பயத்தம் பருப்பு , ஜவ்வரிசியை சுத்தமாக கழுவி, அரைமணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒர் அடி கனமான அகல பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி,

கொதிக்கும் போது, பயத்தம் பருப்பு, ஜவ்வரிசி இரண்டையும் போட்டு மிதமான சூட்டில் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

நன்றாக வெந்த பின், சர்க்கரை சேர்த்துக்கிளறவும்.

பாயாசம் பதம் வந்தவுடன் இறக்கி விடவும்.

வாணலியில் நெய் ஊற்றி, சூடானதும் முந்திரி, திராட்சை வறுத்து பாயசத்தில் போட்டு,

பின் ஏலம் பொடியையும் சேர்த்து நன்கு கிளறவும்.

ஒருபாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் அந்த பாலை பாயாசத்தில் ஊற்றி, நன்கு கிளறி, டம்ளரில் ஊற்றி சிறிது நெய் சேர்த்து, குடிக்க, சுவையோ சுவை என்று கூறவைக்கும்.

இதில் ஜவ்வரிசி சேர்க்காமலும் செய்யலாம்.

அரிசி பாயாசம்.

அரிசி பாயாசம்.

பச்சரிசி கால் கப், சர்க்கரை 1க்ப், தேங்காய் அரைமூடி,

முந்திரி, திராட்சை தலா 10, ஏலம் 3,

நெய் சிறிது.

அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

தேங்காயை துருவி ஊறவைத்த அரிசியுடன் சேர்த்து நன்கு மாவு போல் அரைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 6கப் நீர் ஊற்றி நன்கு கொதிக்கும் போது அரைத்த மாவையும் சேர்த்துக்கிளறிவிடவும்.

நன்கு கொதித்து வெந்தவுடன் சர்க்கரையை சேர்த்து கிளறவும்.

பிறகு, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலம் சேர்க்கவும்.

இறக்கும்போது சிறிது நெய் விட்டு கிளறி இறக்கிடவும்.

சூடாக பறிமாற சூப்பர் சுவையாக இருக்கும்.

பால் பாயாசம்.


பால் பாயாசம்.

பால் 1/2 லிட்டர், சர்க்கரை 2கப், பச்சரிசி 1கப்,

முந்திரி பருப்பு 10, சாரப்பருப்பு 10, காய்ந்ததிராட்ச்சை 10, ஏலம் 5,

நெய் 2 ஸ்பூன்.

முதலில் பச்சரிசியை நெய்யில் வறுத்து மிக்சியில் பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ளவும்

பிறகு கனமான பாத்திரத்தில் பாலுடன் இரண்டுடம்ளர் நீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

அதனுடன் சுத்தமான சர்க்கரையைச் சேர்க்கவும்.

நெய்யில் வறுத்து மிக்சியில் பொடி செய்த பச்சரிசியை, பாலுடன் சேர்த்து, சிறிய தீயில் வைத்து வேக விடவும்.

வெந்து குழைந்து வரும்போது நெய்யில் வறுத்த முந்திரி, சாரப்பருப்பு, திராட்ச்சை சேர்க்கவும்.

ஏலக்காயை பொடி செய்து சேர்த்து நன்கு கிளற வாசனை ஊரை அழைக்கும்.

இதை சூடாகவோ, அல்லது பிரிஜ்ஜில் வைத்து குளிர்ந்த நிலையிலோ விருப்பம் போல் பருகலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.