I am a free bird

ஆலு பராத்தா

April 30, 2009

ஆலு பராத்தா

கோதுமை மாவு மூன்று கப்,

தண்ணீர் ஒருகப்

உப்பு

எண்ணெய் ஒரு ஸ்பூன்

உருளைக்கிழங்கு 2

வெங்காயம் 1

பச்சை மிளகாய் 2

கரம் மசாலா

கொத்தமல்லி

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை கொட்டி அதில் உப்பு, எண்ணெய் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

இதை முப்பது நிமிடம் ஊற வைக்கவும்

உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை நீக்கி நன்கு மசித்து வைக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்

மசித்து வைத்த உருளைக்கிழங்கோடு நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கரம் மசாலா கொத்து மல்லி தழை, உப்பு, சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ள மாவை சிறுசிறு உருண்டையாக உருட்டி வட்ட வடிவில் தேய்த்து, அதன் நடுவில் மசாலா உருண்டைகளை வைத்து நன்றாக மூடி மீண்டும் தேய்க்கவும்.

தோசைக்கல்லை சூடாக்கி அதில் இந்த பராத்தாவை போடவும். இருபக்கமும் பொன்னிறமாக வேகவிட்டுசுற்றிலும் நெய் விட்டு எடுத்தால் சூடான ஆலு பராத்தா ரெடி.

0 கருத்துரைகள்:

Post a Comment