I am a free bird

பயத்தம் பருப்பு தோசை

July 06, 2009



பயத்தம் பருப்பு தோசை.

பயத்தம் பருப்பு ஒரு கப்,
பச்சைமிளகாய்-3,
இஞ்சி சிறு துண்டு,
வெங்காயம்-1
சீரகம் ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் தேவைக்கு,
உப்பு-தேவைக்கு.


பயத்தம் பருப்பை ஒரு நாள் இரவு முழுதும் ஊறவிடவும்.
பிறகு நன்கு கழுவி அதோடு பச்சைமிளகாய்,
இஞ்சி, உப்பு சேர்த்து மைய அரைக்கவும்.
இதோடு சீரகத்தையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு
கரைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை காய வைத்து,
சிறிது எண்ணை ஊற்றி கல் முழுவதும் தேய்த்து
அதில் இந்த மாவை மெல்லிய தோசையாக ஊற்றவும்.
சுற்றிலும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விடவும்.

தோசை பொன்னிறமாக வெந்தவுடன்
திருப்பி போட்டு வேக விடவும்.
அந்த பாகமும் வெந்தவுடன் மீண்டும் திருப்பி போட்டு
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை அதன் மேல் தூவி
இரண்டாக மடித்து பரிமாறவும்.

இதை இஞ்சி சட்னியுடன் சேர்த்து சாப்பிட
நல்ல ருசியாக இருக்கும்.












காஞ்சி தோசை



காஞ்சி தோசை.

அரிசி 2 கப்,
உளுந்து 1/2கப்,
கடலைபருப்பு ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன்,
வெந்தயம் 1/2 டீஸ்பூன்,
தயிர் ஒரு கப்,
பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை,
உப்பு, எண்ணெய் தேவைக்கு ஏற்ப.

அரிசி வெந்தயம் கடலைபருப்பு, உளுந்து
எல்லாவற்றையும் ஒன்றாக
3 முதல் 4 மணிநேரம் ஊறவிடவும்.
ஊறியபிறகு மைய அரைக்கவும்.
அதோடு மஞ்சள்தூள், மிளகுதூள்,
தயிர், பெருங்காயம், உப்பு சேர்த்து கலந்து
ஒரு நாள் முழுவதும் புளிக்கவிடவும்.

அடுத்த நாள் தோசைக்கல்லை காய வைத்து
எண்ணெய் தடவி இந்த மாவை
திக்கான தோசையாக ஊற்றினால் காஞ்சி தோசை ரெடி.






பிரட் பிரியாணி,



பிரட் பிரியாணி.

பஸ்மதி அரிசி ஒரு கப்,
காய்கறி கலவை 2 கப்,
பட்டாணி 1/4கப்,
வெங்காயம்-2,
பிரட் ஸ்லைஸ் 2,
முந்திரி 8,
திராட்சை 8,
ஏலக்காய் 2,
பூண்டு 2 பல்,
லவங்கம்2,
இஞ்சி சிறுதுண்டு,
பச்சைமிளகாய்-4,
கொத்தமல்லி சிறிது,
எண்ணெய்4 டேபிள்ஸ்பூன்,
நெய் 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.

அரிசியை நன்கு கழுவி 15 நிமிடம் ஊறவிடவும்.
பிறகு வடிகட்டி தனியாக வைத்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு
வடிகட்டி வைத்துள்ள அரிசியை போட்டு
5 நிமிடம் வறுத்துக் கொள்ளவும்.

மீண்டும் வாணலியில் சிறிது நெய் விட்டு
பிரட்டை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

அரை வெங்காயம், இஞ்சி, பூண்டு,பச்சை மிளகாய்,
ஏலக்காய், லவங்கம் ஆகியவற்றை
மைய அரைத்துக் கொள்ளவும்.


பிரஷர் குக்கரில் மீதமுள்ள நெய் மற்றும்
எண்ணெய் விட்டு சூடானதும்
அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து
பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு
நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் காய்கறி கலவை,
பட்டாணியை சேர்க்கவும்.

காய்கறிகள் வதங்கியதும்
வறுத்து வைத்துள்ள அரிசியை போட்டு,
தேவையான அளவு தண்ணீர் விட்டு,
உப்பு போட்டு நன்கு கிளறி
குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வேக விடவும்.

10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து
நெய்யில் பொறித்து வைத்துள்ள பிரட்,
முந்திரி , திராட்சையை சேர்த்து கிளறி
கொத்துமல்லி தழையை தூவி பரிமறவும்.