I am a free bird

முருங்கைக்காய் புலவ்

April 30, 2009

முருங்கைக்காய் புலவ்

பாசுமதி அரிசி ஒருகப்

முருங்கைக்காய் ஒன்று

கடுகு 1/2 ஸ்பூன்

வெங்காயம் ஒன்று

பச்சை மிளகாய் இரண்டு

இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் சிறிது

மிளகாய் தூள் 1/4 ஸ்பூன்

எண்ணெய் 2 ஸ்பூன்

உப்பு

முந்திரி 4

முருங்கைக்காயை சிறிது நீளமாக வெட்டிக்கொள்க.

வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து,முந்திரி, முருங்கைக்காய், இஞ்சி பூண்டு விழுது வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பச்சை வாசனை போனதும் மஞ்சள் பொடி கறிவேப்பிலை மிளகாய்தூள் உப்பு சேர்க்கவும். இது நன்கு வெந்ததும் இறக்கவும்.

குக்கரில் அரிசியை களைந்து மூன்று கப் தண்ணீர் விட்டு, வாணலியில் உள்ள கலவையை அரிசியோடு கொட்டி நன்கு கிளறி, குக்கரை மூடி விட்டு விசில் வந்ததும் இறக்கினால் முருங்கைக்காய் புலவ் சாப்பிட ரெடி.


0 கருத்துரைகள்:

Post a Comment