I am a free bird

சொதிக்குழம்பு

February 27, 2009

சொதிக்குழம்பு.

தேவை:
தேங்காய்-3
பாசிப்பருப்பு ஒருகப்,
கேரட் 50கி
பீன்ஸ் 50கி
முருங்கை காய் 2,
முந்திரி 50கி
இஞ்சி 50கி
திராட்ச்சைபழம் 100கி
சின்ன வெங்காயம்100கி
பூண்டு 10பல்
பச்சைமிளகாய் 2
எலுமிச்சை பழம் 2
சீரகம், உப்பு தேவைக்கு

செய்முறை:

பாசிப் பருப்பை வேகவிடவும்.

துருவிய தேங்காயை மூன்று முறை அரைத்துப் ஒவ்வொரு முறையும் பால் எடுத்து, எடுத்தவற்றைத் தனித்தனியாக வைக்கவும்.

காய்கறிகளை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

முதலில் மூன்றாம் பாலை பாத்திரத்தில் ஊற்றி அதில் நீண்ட துண்டுகளாக நறுக்கிய காய்களை போட்டு வேகவிடவும்.

காய்கள் வெந்தபின் இரண்டாம் பாலை விட்டு, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் வேகவைத்த பாசிப்பருப்பைப் போட்டு வேக விடவும்.

இறக்குவதற்கு முன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும் பிறகு பச்சை மிளகாயை கீறி, சீரகம் சேர்த்துத் தாளிக்கவும்.

இப்போது முதல் பாலை விட்டு கெட்டியானதும் இறக்கவும். குழம்பு ஆறியதும் எலுமிச்சை சாறை சேர்க்கவும்.

சாதத்தில் ஊற்றி சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இஞ்சித்துவையல், உருளைகிழங்கு சிப்ஸ் ஏற்றது.