I am a free bird

சொதிக்குழம்பு

February 27, 2009

சொதிக்குழம்பு.

தேவை:
தேங்காய்-3
பாசிப்பருப்பு ஒருகப்,
கேரட் 50கி
பீன்ஸ் 50கி
முருங்கை காய் 2,
முந்திரி 50கி
இஞ்சி 50கி
திராட்ச்சைபழம் 100கி
சின்ன வெங்காயம்100கி
பூண்டு 10பல்
பச்சைமிளகாய் 2
எலுமிச்சை பழம் 2
சீரகம், உப்பு தேவைக்கு

செய்முறை:

பாசிப் பருப்பை வேகவிடவும்.

துருவிய தேங்காயை மூன்று முறை அரைத்துப் ஒவ்வொரு முறையும் பால் எடுத்து, எடுத்தவற்றைத் தனித்தனியாக வைக்கவும்.

காய்கறிகளை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

முதலில் மூன்றாம் பாலை பாத்திரத்தில் ஊற்றி அதில் நீண்ட துண்டுகளாக நறுக்கிய காய்களை போட்டு வேகவிடவும்.

காய்கள் வெந்தபின் இரண்டாம் பாலை விட்டு, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் வேகவைத்த பாசிப்பருப்பைப் போட்டு வேக விடவும்.

இறக்குவதற்கு முன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும் பிறகு பச்சை மிளகாயை கீறி, சீரகம் சேர்த்துத் தாளிக்கவும்.

இப்போது முதல் பாலை விட்டு கெட்டியானதும் இறக்கவும். குழம்பு ஆறியதும் எலுமிச்சை சாறை சேர்க்கவும்.

சாதத்தில் ஊற்றி சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இஞ்சித்துவையல், உருளைகிழங்கு சிப்ஸ் ஏற்றது.

நவரத்ன கிரேவி.

February 26, 2009

நவரத்ன கிரேவி.

கேரட் 1, காலிஃப்ளவர் 1, அவரைக்காய் 10,
குடைமிளகாய் 1, வெங்காயம் 2, தக்காளி 3,
பச்சைப்பட்டாணி 1/2 கப், பனீர் 100கிராம்,  கோவா 50 கிராம், 
இஞ்சி சிறுதுண்டு,, பூண்டு 4பல், 
தனியாபவுடர் 1 ஸ்பூன், சீரகத்தூள் 1ஸ்பூன்,
மிளகாய்பொடி 1ஸ்பூன், கரம் மசாலா 1/2 ஸ்பூன்,
நெய் 2ஸ்பூன்,
எண்ணெய், உப்பு தேவைக்கு

காலிஃப்ளவரை உப்புத் தண்ணிரில் அலசி தனித்தனியாக பிரித்து வைத்துக் கொள்ளவும்

பச்சைப்பட்டாணியை நன்கு அலசி எடுத்துக்கொள்ளவும்.

கேரட்டை நறுக்கிக் கொள்ளவும்.

அவரைகாய், குடை மிளகாய், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

இஞ்சிபூண்டு விழுதை அரைத்துக்கொள்ளவும்.

வாணலி சூடானபின் எண்ணெய்விட்டு வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது பச்சைமிளகாய் போட்டு வதக்கி அத்துடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளையும் போட்டு வதக்கி, சீரகம் தனியா மிளகாய்,கரம் மசால் தூள்வகைகளைப் போட்டு, தேவையான உப்பு, துறுவிய கோவா, பனீர், சேர்த்து,
காய்கள் வேகும் வரை தண்ணீர் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.

காய்கறி வெந்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன், கொத்துமல்லி தழை தூவி, நன்கு கிளறி, இறக்கி விடவும்.

சுடச்சுட இட்லி, தோசை, சப்பாத்தியுடன் பரிமாற சுவை சூப்பர் என்று அனைவரையும் சொல்லவைக்கும்.

சப்ஜி

சப்ஜி

வெள்ளைபட்டாணி வேகவைத்தது 1/4 கப்
பூசணிக்காய் 1/2கிலோ
காய்ந்தமிளகாய் 2
இஞ்சிவிழுது 1ஸ்பூன்
கரம் மசாலா 2 ஸ்பூன்
வறுத்த உளுந்தம் பருப்பு 1ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
மிளகாய்தூள் 1ஸ்பூன்
சர்க்கரை சிறிதளவு,
சீரகப்பவுடர் 1ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
நெய் 1 ஸ்பூன்
எண்ணெய் 2ஸ்பூன்
மசாலா இலை 1
உப்பு தேவைக்கு

பூசணிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலி சூடானபின் எண்ணெய் ஊற்றி வறுத்த உளுந்தம் பருப்பு,மசாலா இலை, காய்ந்த மிளகாய்,இஞ்சிவிழுது,கடலை பருப்பு,   பூசணித்துண்டுகள் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். 

பின்வேக வைத்த பட்டாணி,மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சிறிதளவு சர்க்கரை, தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் 

தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும் . 

தண்ணீர் வற்றிய பிறகு, கரம் மசாலா, சீரகப் பவுடர், நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

இது நாண், சப்பாத்தி தோசை போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.





கடப்பா

கடப்பா

பாசிபருப்பு 1/4கப்
உருளைக்கிழங்கு 1/4கிலோ
பச்சைமிளகாய் 6
தேங்காய் 4 கரண்டி
கசகசா 2 ஸ்பூன்
பொட்டுக்கடலை 2 ஸ்பூன்
தக்காளி 1
சோம்பு 1/2 ஸ்பூன்.
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் 1/4 கப்
கொண்டைக்கடலை/பச்சைப்ப்பட்டாணி 2ஸ்பூன்
உப்பு, பெருங்காயம் தேவைக்கு

பாசிப்பருப்பு, கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கை வேக வைக்கவும். 

வெந்ததும் உருளைக்கிழங்கை தோலுரித்து வைக்கவும்.

பச்சைமிளகாய், தேங்காய், கசகசா,  பொட்டுக்கடலை,  தக்காளி ஆகியவற்றை நைசாக அரைக்கவும்.

வாணலியல் எண்ணெய் ஊற்றி சோம்பு , பெருங்காயம் போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின் உருளைக்கிழங்கு, வேகவைத்த பாசிப்பருப்பு, அரைத்த விழுது அத்தனையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும். 

பச்சை வாசனை போனதும் உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.  

தேவைப்பட்டால் எலுமிச்சை பழத்தை பிழிந்து விடலாம்.

சப்பாத்தி, பூரியுடன் சாப்பிட ஏற்றது.

புளியோதரை

February 14, 2009

புளியோதரை

 

தேவையானவை:

புளி -ஒரு பெரிய எலுமிச்சை அளவு

வற்றல் மிளகாய்-12

கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, கடலைப்பருப்பு  தாளிக்கத் தேவையான அளவு. (இதில் கடலைப்பருப்பை மட்டும் சிறிதளவு தண்ணீரில் ஊறவைத்துப் பிறகு தாளிக்கும்போது சேர்த்து தாளிக்கலாம்.)

நல்லெண்ணெய்- தேவையான அளவு

பெருங்காயம், எள், வெந்தயம் ஒன்றரைத் தேக்கரண்டி.

 

செய்முறை:

முதலில் இரண்டரை டம்ளர் தண்ணீரில் புளியை ஊறவைத்துக்கொள்ளவும்.

எள்ளை சுத்தப்படுத்தி நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

வற்றல் மிளகாய் 4, வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றை நன்கு வறுத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில்வறுத்த இந்த பொருட்களையெல்லாம் பொடியாக்கிக்கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிக்கத் தேவையான எண்ணெய்யை ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, ஊறவைத்த கடலைப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து மீதம் உள்ள வற்றல் மிளகாயையும் சேர்த்து தாளிக்கவும். இதில் ஊறவைத்த புளிக்கரைசலை ஊற்றி நன்கு கொதிவந்ததும்

பொடி செய்த கலவையையும் உப்புயையும் சேர்த்து  நன்றாக கொதிக்க விட்டு கெட்டிக்கலவையாக வந்ததும் இறக்கிவிடவும்.

சாதத்தை உதிரியாக வடித்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கிளறி ஆறவிட்டு, பிறகு இந்த கலவையை சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் கழித்து, பிறகு சாப்பிட்டால் மிகச் சுவையாக இருக்கும்.

தேவைப்படுபவர்கள் தாளிக்கும்போது 10 முந்திரி பருப்பையும் சிவக்க வறுத்து சேர்க்கலாம்.