கறிவேப்பிலை ஒரு கொத்து,
கடுகு ஒரு தேக்கரண்டி,
சோம்பு, ஆகிவற்றை சிறிதளவு
பச்சைமிளகாய், கறிவேப்பிலை போடவும்.
வறுத்துப் பொடித்த மிளகாய் வற்றல், வெந்தயம்,தனியா
கரைத்து ஊற்றவும். உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
நன்கு கிளறினால்பருப்பு சாதம் சாப்பிடத் தயார்.

Today's special சமைக்கவும் ருசிக்கவும்
ஆலு பூரி
மைதா 1/2கிலோ
உருளைக் கிழங்கு 200 கிராம்
சோடாமாவு 1 சிட்டிகை
உப்பு
எண்ணெய் பொரிக்கத்தேவையான் அளவு
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மைதா மாவுடன் சேர்த்து, உப்பு, சோடா மாவும் சேர்த்து பிசைந்து கொள்ளவேண்டும். இக் கலவையை அரைமணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
பிறகு சிறுசிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கட்டையில் வட்ட வடிவில் தேய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்
வித்தியாசமான சுவையுடன் கூடியது என்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஆலு பராத்தா
கோதுமை மாவு மூன்று கப்,
தண்ணீர் ஒருகப்
உப்பு
எண்ணெய் ஒரு ஸ்பூன்
உருளைக்கிழங்கு 2
வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
கரம் மசாலா
கொத்தமல்லி
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை கொட்டி அதில் உப்பு, எண்ணெய் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
இதை முப்பது நிமிடம் ஊற வைக்கவும்
உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை நீக்கி நன்கு மசித்து வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்
மசித்து வைத்த உருளைக்கிழங்கோடு நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கரம் மசாலா கொத்து மல்லி தழை, உப்பு, சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை சிறுசிறு உருண்டையாக உருட்டி வட்ட வடிவில் தேய்த்து, அதன் நடுவில் மசாலா உருண்டைகளை வைத்து நன்றாக மூடி மீண்டும் தேய்க்கவும்.
தோசைக்கல்லை சூடாக்கி அதில் இந்த பராத்தாவை போடவும். இருபக்கமும் பொன்னிறமாக வேகவிட்டுசுற்றிலும் நெய் விட்டு எடுத்தால் சூடான ஆலு பராத்தா ரெடி.
ஓட்ஸ் பட்டூரா
கோதுமை மாவு ஒரு கப்
ஓட்ஸ் ஒரு கப்
ரவை நாலு ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
உப்பு
எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
முதலில் ஓட்சை மிக்சியில் போட்டு மாவாக பொடி செய்து கொள்ளவும்.
ஓட்ஸ் மாவு, கோதுமை மாவு, ரவை, நெய், உப்பு, அனைத்தையும் ஒன்றாக கலந்து தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவேண்டும்.
இருபது நிமிடங்கள் மாவு ஊறியதும் வட்ட வடிவில் பூரிகளாக தேய்த்து எண்ணையில் பொரித்து எடுக்க வேண்டும்.
உருளைக்கிழங்கு மசாலாவுடன் சேர்த்து சாப்பிட சத்தான பூரி ரெடி.
முருங்கைக்காய் புலவ்
பாசுமதி அரிசி ஒருகப்
முருங்கைக்காய் ஒன்று
கடுகு 1/2 ஸ்பூன்
வெங்காயம் ஒன்று
பச்சை மிளகாய் இரண்டு
இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் சிறிது
மிளகாய் தூள் 1/4 ஸ்பூன்
எண்ணெய் 2 ஸ்பூன்
உப்பு
முந்திரி 4
முருங்கைக்காயை சிறிது நீளமாக வெட்டிக்கொள்க.
வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து,முந்திரி, முருங்கைக்காய், இஞ்சி பூண்டு விழுது வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பச்சை வாசனை போனதும் மஞ்சள் பொடி கறிவேப்பிலை மிளகாய்தூள் உப்பு சேர்க்கவும். இது நன்கு வெந்ததும் இறக்கவும்.
குக்கரில் அரிசியை களைந்து மூன்று கப் தண்ணீர் விட்டு, வாணலியில் உள்ள கலவையை அரிசியோடு கொட்டி நன்கு கிளறி, குக்கரை மூடி விட்டு விசில் வந்ததும் இறக்கினால் முருங்கைக்காய் புலவ் சாப்பிட ரெடி.
பிரட் புலவ்
பாஸ்மதி அரிசி ஒரு கப்
காய்கறி கலவை இரண்டு கப்
பட்டாணி 1/4 கப்
வெங்காயம் 1 கப்
பிரட் ஸ்லைஸ் 3
ஏலம், லவங்கம், பட்டை, பூண்டு, இஞ்சி சிறிது அளவு
முந்திரி 10
திராட்சை 10
பச்சைமிளகாய் 4
எண்ணெய் 3ஸ்பூன்
நெய் 3ஸ்பூன்
உப்பு
அரிசியை நன்கு களைந்து 15நிமிடம் ஊறவிட்டு நீரை வடித்து தனியாக வைக்கவும்.
வானலியில் ஒருஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் அரிசியை வறுக்கவும்.
அரைகப் வெங்காயம் பச்சைமிளகாய், ஏலம் லவங்கம், பட்டை, பூண்டு, இஞ்சி,ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பிரட்டை சிறு துண்டுகளாக்கி நெய்யில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்
குக்கரை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து அரைத்த மசாலா கலவை, வெங்காயம், காய்கறி, பட்டாணி, ஆகியவற்றைவரிசையாக சேர்த்து வதக்கவும்.
ரவா இட்லி
ரவை ஒரு கப்
கடுகு, கடலை பருப்பு, கருவேப்பிலை, கொத்துமல்லி எண்ணெய் ஆகியவை தாளிக்க தேவையான அளவு
இஞ்சி சிறுதுண்டு
பச்சை மிளகாய் மூன்று
கேரட் ஒன்று
தயிர் ஒரு கப்
முந்திரி பத்து
ஆப்ப சோடா சிறிது
உப்பு
முதலிலி ரவையை பொன்னிறமாக வறுக்கவும்
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கடலைபருப்பு,இஞ்சி, நறுக்கிய பச்சைமிளகாய்,கொத்தமல்லி தழை, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அடுப்பில் இருந்து இறக்கி துருவிய கேரட், தயிர், தண்ணீர் ஆப்பசோடா, உப்பு சேர்த்து ரவையுடன் நன்கு அழுத்தி பிசைந்து கொள்ளவும் அரைமணிநேரம் ஊறிய பின் இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொண்டு இட்லி தட்டில் ஊற்றி ஒவ்வொரு இட்லியிலும் ஒரு வறுத்த முந்திரியை வைத்து வேகவிடவும். பத்து நிமிடத்தில் ரவா இட்லி ரெடி.