I am a free bird

மடலாண்டி

April 30, 2009

மடலாண்டி

பச்சை வேர்கடலை ஒரு கப், தக்காளி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், தலா ஒன்று,வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன், கரம் மசாலா, மிளகாய் தூள் தலா 2ஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கு ஏற்றவாறு.

வேர்க்கடலையை உரித்து தண்ணீரில் ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும்.

வெங்காயம் தக்காளி நறுக்கி அரைத்துக் கொள்ளவும்

வாணலி சூடான பின் இஞ்சி பூண்டு விழுது அரைத்த வெங்காயம் தக்காளி விழுது கரம் மசாலா, மிளகாய் தூள் ஆகிய்வற்றை வரிசையாக சேர்த்து வதக்கி, தேவையான தண்ணீர் சேர்க்கவும். பின்னர் வேக வைத்துள்ள வேர்க்கடலையை கொட்டி தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விட்டு கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவேண்டியதுதான்.

சப்பாத்தி, பூரி, இட்லிக்கு ஏற்ற கிரெவி

சன்னா மசாலா

சன்னா மசாலா

வெள்ளைக்கொண்டைகடலை கால் கிலோ

வெங்காயம் 3

தக்காளி 6

இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்

பச்சைமிளகாய் 6

சீரகம் 1/2ஸ்பூன்

மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை

சன்னாமசாலா பவுடர் 1 ஸ்பூன்

தனியா தூள் 2 ஸ்பூன் மிளகாய்தூள் 4 ஸ்பூன்

எண்ணெய் உப்பு தேவையான அளவு,

வெள்ளைக்கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும் காலையில் குக்கரில் வேக வைக்கவேண்டும்.

வெந்த கொண்டைக்கடலையை ஒருகைஅளவு எடுத்து மிக்ஸியில் நன்றாக மசிக்கவேண்டும்

தக்காளி, பச்சைமிளகாயை தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் போட்டு பொரிந்ததும், இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம்போட்டு வதக்கி, சன்னா மசாலா தூள் போட்டு, அரைத்த தக்காளி, பச்சைமிளகாய் விழுது மசித்த கொண்டைக்கடலை விழுது தேவையான் உப்பு, மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, தனியாத்தூள், மிளகாய்தூள்,அரைகப் நீர் சேர்த்து கொதிக்க வைத்து கிரேவி பதத்திற்கு வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி சப்பாத்தி, தோசை, இட்லி ஆகிய வற்றிற்கு தொட்டு சாப்பிடவேண்டியதுதான்.

சைனிஸ் வெஜிடபிள் கிரேவி

சைனிஸ் வெஜிடபிள் கிரேவி.

கேரட், காலி பிளவர், முட்டைகோஸ் தலா 100 கிராம்,

பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கப்

பூண்டு 4 பல்,

மிளகுதூள் 1 ஸ்பூன்

எலுமிச்சை பழம் சாறு 2 ஸ்பூன்

சோயா சாஸ் 1 ஸ்பூன்

அஜினோமோட்டோ ஒரு சிட்டிகை

சோள மாவு 1 ஸ்பூன் சர்க்கரை ஒரு ஸ்பூன்

எண்ணெய் உப்பு தேவையான அளவு,

எல்லாக்காய்களையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

வாணலியை சூடாக்கி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய பூண்டு, வெங்காயம், காய்கள் சேர்த்து வதக்கி,

எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், உப்பு ஜோயா சாஸ், சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு வதக்கி, சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து வதங்கிய கலவையில் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

பூரி சப்பாத்தி நாண் போன்ற அனைத்திற்கும் ஏற்றதுணை உணவு.

வெஜிடபிள் பட்டாணி கிரேவி


பட்டாணி 200 கிராம், துருவிய கேரட் ஒரு கப், வெள்ளரிக்காய் ஒருகப், மாங்காய், தேங்காய் துருவல் ஒரு கப்,

பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கப்,

மிளகாய் தூள் 2 ஸ்பூன், கடுகு கருவேப்பிலை,கொத்தமல்லி தாளிக்க தேவையான அளவு.

எண்ணெய் தாளிக்க

உப்பு தேவையான அளவு.

பட்டாணியை நன்கு ஊறவைத்து ஊறியபின் குக்கரில் வேக வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும், வெங்காயம்சேர்த்து வதக்கவும்.

பிறகு மிளகாய்தூள், உப்பு, நீர் சேர்த்து கொதிக்க விட்டு வேக வைத்த பட்டாணி, காய்கறிகள் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.

நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கவும்

பூரி சப்பாத்தி இட்லி ஆகியவற்றிற்கு ஏற்றது.

உக்காரா

பாசிப்பருப்பு ஒரு க்ப்,

அரிசி மாவு 2 ஸ்பூன்

சர்க்கரை ஒரு கப்

தேங்காய் துருவல் 1/2 கப்

முந்திரிப்பருப்பு 2 ஏலம் 2

நெய் 1/4 கப்

எண்ணெய் 1 ஸ்பூன்

பாசிப்பருப்பை மிதமான தீயில் லேசாக வறுத்து குழையாமல் வேக வைத்து தண்ணிரை வடிகட்டவும், எண்ணெய் நெய் கலந்து காய வைத்து அதில் அரிசி மாவு, முந்திரி,ஏலம் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்

அடுப்பில் வாணலியை வைத்து சர்க்கரையுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து கரைய விடவும், மாவில் சர்க்கரைப் பாகை விட்டு, வெந்த பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறவும்.

உக்காரா சாப்பிடத் தயார்.