I am a free bird

புளியோதரை

February 14, 2009

புளியோதரை

 

தேவையானவை:

புளி -ஒரு பெரிய எலுமிச்சை அளவு

வற்றல் மிளகாய்-12

கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, கடலைப்பருப்பு  தாளிக்கத் தேவையான அளவு. (இதில் கடலைப்பருப்பை மட்டும் சிறிதளவு தண்ணீரில் ஊறவைத்துப் பிறகு தாளிக்கும்போது சேர்த்து தாளிக்கலாம்.)

நல்லெண்ணெய்- தேவையான அளவு

பெருங்காயம், எள், வெந்தயம் ஒன்றரைத் தேக்கரண்டி.

 

செய்முறை:

முதலில் இரண்டரை டம்ளர் தண்ணீரில் புளியை ஊறவைத்துக்கொள்ளவும்.

எள்ளை சுத்தப்படுத்தி நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

வற்றல் மிளகாய் 4, வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றை நன்கு வறுத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில்வறுத்த இந்த பொருட்களையெல்லாம் பொடியாக்கிக்கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிக்கத் தேவையான எண்ணெய்யை ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, ஊறவைத்த கடலைப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து மீதம் உள்ள வற்றல் மிளகாயையும் சேர்த்து தாளிக்கவும். இதில் ஊறவைத்த புளிக்கரைசலை ஊற்றி நன்கு கொதிவந்ததும்

பொடி செய்த கலவையையும் உப்புயையும் சேர்த்து  நன்றாக கொதிக்க விட்டு கெட்டிக்கலவையாக வந்ததும் இறக்கிவிடவும்.

சாதத்தை உதிரியாக வடித்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கிளறி ஆறவிட்டு, பிறகு இந்த கலவையை சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் கழித்து, பிறகு சாப்பிட்டால் மிகச் சுவையாக இருக்கும்.

தேவைப்படுபவர்கள் தாளிக்கும்போது 10 முந்திரி பருப்பையும் சிவக்க வறுத்து சேர்க்கலாம்.



0 கருத்துரைகள்:

Post a Comment