I am a free bird

பருப்பு சாதம்

December 28, 2009



பருப்பு சாதம்

அரைக்கிலோ அரிசி,
கால் லிட்டர் துவரம் பருப்பு,
தேவையான அளவு உப்பு,
நெய் 4 மேஜைக்கரண்டி,
எண்ணெய் 125 மி.லி.,
வெந்தயம் 2 தேக்கரண்டி,
பெருங்காயம் சிறு துண்டு,
தனியா 2 மேஜைக்கரண்டி,
தேங்காய் துருவல் ஒரு கப்,
பச்சை மிளகாய் 8,
முந்திரிப்பருப்பு 20,
வற்றல்மிளகாய் 20,
புளி எலுமிச்சை அளவு
கொத்தமல்லி தழை சிறிதளவு,
கறிவேப்பிலை ஒரு கொத்து,
கடுகு ஒரு தேக்கரண்டி,
மசாலா பொடி 2 தேக்கரண்டி,
கசகசா 2 தேக்கரண்டி,
கிராம்பு 6,
சோம்பு சிறிதளவு,
ஏலக்காய் 6.



மிளகாய், வெந்தயம், தனியா, கிராம்பு, கசகசா,
சோம்பு, ஆகிவற்றை சிறிதளவு
எண்ணெயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவிபொன் வறுவலாக
வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
இவையெல்லாவற்றையும் இடித்து
பொடி செய்து கொள்ளவும்.

பருப்பை அரை லிட்டர் நீரில் மஞ்சள் பொடி கலந்து வேகவிடவும்.
நன்றாக பருப்பு வெந்ததும் மூன்று லிட்டர் நீர் விடவும்.
அதனுடன் அரிசியைப் போட்டு வேகவிடவும்.
அரிசியும்பருப்பும் நன்றாக வெந்து
பொங்கல் போல் வரும் சமயத்தில்
புளியைக் கரைத்து அதில் ஊற்றி நன்றாகக் கிளறவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஏலம், கடுகு,
பச்சைமிளகாய், கறிவேப்பிலை போடவும்.
கடுகு வெடித்தவுடன் அதை பருப்பு சாதத்துடன்கலந்து
நன்றாகக் கிளறவும். பின்னர் சாதத்துடன் மசாலாப் பொடி,
வறுத்துப் பொடித்த மிளகாய் வற்றல், வெந்தயம்,தனியா
ஆகியவற்றைப் போட்டு, மறுபடியும் சிறிது புளியைக்
கரைத்து ஊற்றவும். உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

இந்த சாதத்தை சிறிது நேரம் அடுப்பில் வைத்திருந்தால் பருப்பு சாதம்கெட்டியாகி விடவும். பின்பு முந்திரிபருப்பு வறுத்து சேர்த்து கொத்துமல்லிதழையைத் தூவி
நன்கு கிளறினால்பருப்பு சாதம் சாப்பிடத் தயார்.








1 கருத்துரைகள்:

பனித்துளி சங்கர் said...

அய்யா நான்தான் பர்ஸ்ட் !
ஒவ்வொன்றும் அருமை . வாழ்த்துக்கள்

Post a Comment