
காலிஃப்ளவர் மசால் தோசை:
தேவையானவை:
காலிப்ளவர் - 1,
சீரகம் - 1 தேக்கரண்டி,
இஞ்சிபூண்டு அரைத்து - 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 3,
பெரியவெங்காயம் - 4,
தக்காளி - 3,
எண்ணெய் 3 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 3 தேக்கரண்டி,
மல்லித்தூள் 3 தேக்கரண்டி
செய்முறை: முதலில் காலிஃப்ளவரை தூண்டுகளாக்கி சுடு நீரில் போட்டு நன்றாக அலசி சிறிது மஞ்சள்தூள், சிறிது உப்புத்தூள் போட்டு கலந்து பின் நன்கு வேகவிடவும்.(சில காலிப்ளவரில் புழு இருக்கும் அதனால் சுடு நீரில் அலசிய பின் வேகவைக்கவேண்டும்)
பிறகு வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடு எறியதும் 1 தேக்கரண்டி சீரகம், பின் இஞ்சிபூண்டு அரைத்தது, பின் பச்சைமிளகாய் 3 நறுக்கியது, அத்துடன் பெரியவெங்காயம் தக்காளி நறுக்கியது போட்டு நன்கு கிளறி பின்னர் வேகவைத்த காலிப்ளவர் தூண்டுகளை சேர்த்து மஞ்சள்தூள், மிளகாய்தூள், மல்லித்தூள், உப்பு தேவையான அளவு போட்டு சிறிது நீர் விட்டு நன்கு கிளறி வேகவைத்து இறக்கவும். சூடான சுவையான காலிப்ளவர் மசால் ரெடி.
இதை தோசையின் உள்ளே வைத்து காலிஃப்ளவர் மசால் தோசையாக வார்த்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிடலாம்.
0 கருத்துரைகள்:
Post a Comment